விளம்பி வருட தமிழ் புத்தாண்டு ராசி பலன் - துலாம்

இந்த புது வருட தொடக்கத்தில் ராசியில் குரு  தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி  சுக ஸ்தானத்தில் கேது  தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள்
அமைந்திருக்கின்றன. சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்டு மஹாலட்சுமியின் அருள் பெற்ற துலா ராசி அன்பர்களே, நீங்கள் தியாக மனப்பான்மை கொண்டவர்கள். இயல்பாக செயலாற்றலும் அறிவுத் திறனும் கொண்டவர்களாக இருப்பீர்கள். தனிப்பட்ட திறமைகள் கொண்ட நீங்கள் எப்போதுமே யாரையாவது சார்ந்து இருப்பீர்கள். உங்கள் தகுதிக்கேற்ற நபர்களிடம் மட்டும் தொடர்பு வைத்திருந்தால் உங்களுக்கு வெற்றி தேடி வரும். எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் அதிகமாக சிந்தித்து செயல்படுவது சிறந்தது. இந்த ஆண்டில் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சுபச்செலவுகள் உண்டாகும். பல வகையிலும் முயன்று வருமானத்தை ஈட்டுவீர்கள். குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். சிலர் சொந்த வீடு வாங்குவார்கள். உங்கள் பொறுப்புகளை எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் முடித்து விடுவீர்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு கொள்வீர்கள்.

பயணங்கள் மேற்கொண்டு புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்களைத் தேடி நல்ல செய்திகள் வந்து கொண்டிருக்கும். அரசாங்கத்திலிருந்து வந்து கொண்டிருந்த கெடுபிடிகளும் குறையும். சமுதாயத்தில் உயர்ந்தோரை நாடிச் சென்று அவர்களின் ஆலோசனைகளால் பயனடைவீர்கள். கடினமான செயல்களைச் செய்து முடிக்க உங்கள் உடலாரோக்கியம் ஒத்துழைக்கும். முற்காலத்தில் வாங்கிய சொத்துக்களை விற்று முறையாகத் தொடர் வருமானம் ஈட்டும் முதலீடுகளைச் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு:  நீங்கள் விரும்பும் இடமாற்றம் கிடைக்கும். ஆனால் மேலிடத்துடன் சிறிது இணக்கமாகச் செல்வது நல்லது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் மீது மற்றவர்கள் வீண் குற்றச்சாட்டு சுமத்த நேரலாம். கவனம் தேவை. குடும்பத்தை விட்டு சிறிது காலம் பிரிந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். பணிகளின் நிமித்தமாக அடிக்கடி பிரயாணங்கள் ஏற்படும். நீங்கள் செய்யும் பணிகளின் மீது அதிக கவனம் செலுத்துவது நல்லது. உங்களிடம் இருக்கும் ஆவணங்களை சரியான முறையில் பாதுகாத்துக் கொள்வது அவசியம்.

மறைமுக எதிர்ப்புகளைச் சமாளிக்க எந்த சூழ்நிலையிலும் நியாயத்தின் பக்கம் நிற்பது நன்மை தரும். தொழில் துறையினருக்கு சக போட்டியாளர்கள் மூலம் தேவையற்ற வீண் மன உளைச்சல் ஏற்படலாம். உங்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களிடம் கனிவான உறவை கடைப்பிடிப்பது நல்லது. அதிக வருமானம் பெற அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உப தொழிலை ஆரம்பிக்க தருணங்கள் ஏற்படும். எந்த யோசனையையும் சரியான ஆலோசகர்களிடம் கலந்துரையாடி முடிவெடுங்கள். கலைத்துறையினருக்கு: உங்களுக்குக் கிடைக்கும் சிறு வாய்ப்புகளைக் கூட வீணாக்காமல் பயன்படுத்துவது நல்லது. உங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவர சிறந்த காலகட்டம் இதுவாகும். பாராட்டு புகழ் விருது உங்களைத் தேடி வரும். பாடலாசிரியர்  பின்னணி இசைக்கலைஞர்கள்  நடன வல்லுனர்கள் ஆகியோருக்கும் ஜூன் மாதத்திற்குப் பிறகு பொன்னான காலகட்டமாக இருக்கும். சக கலைஞர்களிடம் சுமுகமாக நடந்து கொள்வது சிறந்தது. வெளியூர் பயணங்களின் போது உடைமைகளை சிறிது அக்கறை எடுத்து கவனமாக பார்த்துக் கொள்ளவும். மாணவ,மணிகளுக்கு கல்வியில் சிறிது ஆர்வக்குறைவு ஏற்படலாம்.

மனதை நிலையாக்கிக் கொள்ளவும். உடல் உபாதைகள் மூலம் சில தடைகள் ஏற்படலாம். உடல்நலத்தைப் பேணுவதில் அதிக சிரத்தை அவசியம். விளையாட்டில் சாதனைகளை படைப்பீர்கள். அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கு அதிகமான முயற்சி தேவை. அரசியல் துறையினருக்கு உங்கள் மீது தலைமை அதிகமான நம்பிக்கை கொள்ளும். உங்கள் நண்பர்களே உங்களுக்கு எதிராக செயல்படலாம். ஆனாலும் புரிந்து கொண்டு செயல்படுவது நன்மை தரும். உங்களுடைய விசுவாசத்திற்கு மேலிடம் உங்களுக்கு சரியான பதவிகளை அளிப்பார்கள். சிலருக்கு சுழல் விளக்கில் பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் கிட்டும். அதே வேளையில் மன உறுதியை வளர்த்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். அனைவரிடமும் கனிவாக நடந்து கொள்வது சிறந்தது.  நெருக்கடியான நேரத்தில் பக்குவத்தையும், பொறுமையையும் கடைபிடிப்பது சிறந்தது. குடும்பத்தில் அனைவரிடமும் ஏற்படும் சிக்கலான வாக்குவாதங்களில் விட்டுக் கொடுத்து போவது நன்மை அளிக்கும். தேவையற்ற கோபத்தை விட்டுத் தள்ளுங்கள். அக்கம்பக்கத்தினருடன் அளவோடு நட்பு வைத்துக் கொள்வது நல்லது. கருவுற்றிருக்கும் பெண்கள் நிதானமாக இருப்பது அவசியம்.

பரிகாரம்:

குல தெய்வத்தை தினமும் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். 

அதிர்ஷ்ட எண்கள்:

2, 6, 7, 9.

அதிர்ஷ்ட கிழமைகள்:

திங்கள் வெள்ளி.

திசைகள்:

மேற்கு, தென்மேற்கு.

நிறங்கள்:

வெள்ளை, சிவப்பு.

சொல்ல வேண்டிய மந்திரம்:

“ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்ம்யை நம” என்ற மந்திரத்தை தினமும் 15 முறை சொல்லவும்.