விளம்பி வருட தமிழ் புத்தாண்டு ராசி பலன் - சிம்மம்

இந்த புது வருட தொடக்கத்தில் தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு  பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி  ரண ருண ரோக ஸ்தானத்தில்
கேது  அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் அமைந்திருக்கின்றன. சூரியனை ராசிநாதனாகக் கொண்டு, சிவ பெருமானின் அருள் பெற்ற சிம்ம ராசி அன்பர்களே, நீங்கள் கம்பீரமான தோற்றம் உடையவர்கள். சுவையான உணவினைத் தேடி உண்பீர்கள். தைரியமானவர். பொருள் சேர்க்கை அதிகம் உடையவர். அடுத்தவர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவதில் திறமை மிக்கவர். அனைத்தையும் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள். மக்களை உங்கள் பக்கம் கொண்டு வருவதில் மிக வல்லவர். இந்த ஆண்டில் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணம் எதிர்பார்த்த அளவுக்கு வந்து கொண்டிருக்கும். உங்களின் முயற்சிகளைச் செம்மைப்படுத்தி காரியங்களை ஆற்றி வெற்றி பெறுவீர்கள். புதிய சேமிப்புத் திட்டங்களிலும் ஈடுபடுவீர்கள். சிலர் புதிய வீடு வாங்கி கிரகப் பிரவேசம் செய்வார்கள்.

உங்களின் அசாத்திய துணிச்சலால் செயற்கரிய சாதனைகளைச் செய்வீர்கள். மறக்க முடியாத விதத்தில் அரசு வழியில் சில சலுகைகள் கிடைக்கும். முக்கியமானவர்களுடன் பேசும்போது உங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் உண்டாகும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். மேலும் உங்களிடம் மற்றவர்கள் சொன்ன ரகசியங்களையும் காப்பாற்றுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவோடு, எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நற்பலன்களை எளிதில் பெற்று மகிழ்வீர்கள். மனநிறைவு பெறும் வகையில் மறைமுக வருமானங்கள் பெருகும். சிலர் வேலையில் இருந்து கொண்டே தொழில் ஒன்றைத் தொடங்கி உபரி வருமானத்துக்கு வகை செய்து கொள்வீர்கள். சொந்த வீடு இல்லாமல் இதுவரை இருந்த சிலர் சொந்த வீடு அரசு குடியிருப்பு போன்ற ஏதேனும் வசதிகளைப் பெற்று மகிழக்கூடும்.

வியாபாரிகளுக்கு: வாடிக்கையாளர்களின் ஆதரவு தொடர்ந்து நல்லமுறையில் இருந்து வரும். நீங்கள் தரமான பொருட்களை விநியோகம் செய்து வருவதன் காரணமாக புதிய வாடிக்கையாளர்களும் உங்களை நாடி வருவார்கள். நீங்கள் வியாபார ஸ்தலத்தை விரிவுபடுத்தவும், வேறு புதிய இடத்திற்கு மாற்றவும் அல்லது கிளைகளைத் திறக்கவும் முயற்சி செய்து வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்து அதிக அளவில் இருப்பு வைக்காமல் இருந்தால், உங்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பேயில்லாமல், முழுமன நிறைவு கிட்டும் வகையில் திருப்திகரமான ஆதாயம் கிடைத்து வருவதில் தடையே இராது. மனைவியின் பெயரில் சொந்த வீடு வாங்கும் அமைப்புண்டு. கலைத்துறையினர்: வாய்ப்புகளைத் தேடி நீங்கள் பலரைச் சந்திக்கச் சென்ற நிலை மாறி வாய்ப்பு தரும் நோக்கில் பல முன்னணி நிறுவனங்கள் தாமே உங்களைத் தேடி வந்து வாய்ப்பு கொடுக்கும் நிலை உண்டு. உங்கள் திறமைகள் முழுவதையும் வெளிப்படுத்தி ரசிகர்களின் அபிமானத்தையும் ஆதரவையும் பெருவாரியாகப் பெறுவீர்கள்.

உங்கள் பெருமையும், புகழும் நாடெங்கும் நன்கு பரவும். மாணவர்கள் கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கல்விச் சலுகைகள் பெறக்கூடிய வாய்ப்பு உண்டு. விளையாட்டு, போட்டிகள் போன்றவற்றிலும் பரிசுகளைப் பெற்று மகிழ்வீர்கள். அயல் நாட்டுப் பயண வாய்ப்புகளும், உயர்படிப்புக்காக வெளிநாடுகளுக்கும் செல்லக் கூடும். படிப்பு முடிவடைவதற்கு  முன்னரே  சிலருக்கு வேலை வாய்ப்பு முன்வரக்கூடும். அரசியல்வாதிகளின் தன்னலமற்ற தொண்டுக்குப் பாராட்டுகள் குவியும். தலைமையின் நன்மதிப்பையும்  தொண்டர்களின் பெரும் ஆதரவையும் பெற்றுள்ள உங்களுக்கு சொல்வாக்கும்  உங்களுக்குத் தனி மரியாதையைப் பெற்றுத் தரும். பொறுப்பான பதவிகள் உங்களைத் தேடி வரும்  உங்கள் பொருளாதார நிலையும் நல்ல முறையில் வளர்ச்சியடையும். வங்கிக்கணக்கில் சேமிப்பு பெருகும்.

வீடு, மனை, வண்டி, வாகன வசதிகளைக் குறைவறப் பெற்றுக் களிப்பில் திளைப்பீர்கள். பெண்கள் வீட்டுக்குத் தேவையான நவ நாகரிகப் பொருட்களை வாங்கி வீட்டை அழகுபடுத்துவீர்கள். புத்திர வழியில் மகிழ்ச்சிதரும் நிகழ்ச்சிகள் நடைபெற இடமுண்டு. குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவும் நிம்மதிக்காகவும் பெருமளவில் பாடுபடும் உங்கள் மீது அனைவருமே அன்பு செலுத்த முன்வருவார்கள். குடும்ப பிரச்னைகள் வெளியில் தெரியாமல் எதையுமே பக்குவமாக சமாளிப்பீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை, உறவினர்  வருகை எல்லாமே உங்கள் மகிழ்ச்சியைப் பெருக்கும் வகையில் அமையும். சிலர் மனம்போல மாங்கல்யம்  அமையப் பெருவீர்கள். உங்கள் பிறந்த வீட்டு வகையிலான உறவு உங்கள் கணவருக்கு பெரிதும் துணையாயிருக்கும்.

பரிகாரம்:

ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோவிலை 11 முறை வலம் வரவும். பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும். சமூகத்தில் அந்தஸ்து அதிகாரம் கிடைக்க பெறும்.

அதிர்ஷ்ட எண்கள்:

1, 3, 5, 9.

அதிர்ஷ்ட கிழமைகள்:

ஞாயிறு  செவ்வாய்  வியாழன்.

திசைகள்:

கிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்:

வெள்ளை, சிவப்பு.

சொல்ல வேண்டிய மந்திரம்: 

“ஓம் நமசிவய” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.